இரண்டு தென் அமெரிக்க நாடுகள் பினாகா ராக்கெட்டுகளை வாங்க ஆர்வம் காட்டியிருப்பதால் 120 கிலோமீட்டர் மற்றும் 200 கிலோமீட்டர் தொலைவுக்கு தாக்குதல் தொடுக்கக் கூடிய பல அடுக்கு ராக்கெட்டுகள் மற்றும் லாஞ்சர்கள் தயாரிப்பதில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி இயக்குனரகமான DRDO ஈடுபட்டுள்ளது.
தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த ராக்கெட்டுகள் தயாரிக்கப்படுவதாக தகவ வெளியாகி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி 75 முதல் 80 கிலோமீட்டர் வரை தான் ராக்கெட்டுகளை ஏவ முடியும் என்றும் இவற்றை மேலும் தொலைதூர தாக்குதலுக்குத் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.