​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மும்பை அடல் சேது பாலத்தில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பது சட்டவிரோதம் : காவல் துறை

Published : Jan 16, 2024 5:25 PM

மும்பை அடல் சேது பாலத்தில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பது சட்டவிரோதம் : காவல் துறை

Jan 16, 2024 5:25 PM

அடல் சேதுவின் மீது செல்பவர்கள் ஆங்காங்கே நின்று நிழற்படம், வீடியோ எடுப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை அடுத்து, பாலத்தின் மீது வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிக நீண்ட பாலமான 21 புள்ளி 8 கிலோ மீட்டர் நீளமுள்ள அடல் சேதுவை கடந்த 12-ஆம் தேதியன்று பிரதமர் திறந்து வைத்ததை அடுத்து மும்பையில் இருந்து நவி மும்பைக்கான பயண நேரம் வெறும் 20 நிமிடங்களாக குறைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், அடல் பாலத்தை பிக்னிக் ஸ்பாட் அல்ல என்று அறிவித்துள்ள மும்பை போலீசார், பாலத்தின் மீது வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பது சட்டவிரோதம் என்றும், அவ்வாறு நிறுத்துவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.