அயோத்தியில் பிராண பிரதிஷ்டைக்கு மறுநாளான ஜனவரி 23-ஆம் தேதி முதல் ராமரை தரிசிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை அறிவித்துள்ளது.
22ஆம் தேதியன்று பிற்பகல் 12.20 மணி முதல் 2 மணி வரை பிரதிஷ்டை விழா நடைபெறும் என்று அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
மைசூருவைச் சேர்ந்த சிற்பி வடிவமைத்த சுமார் 200 கிலோ எடையுள்ள 5 வயது குழந்தை ராமரின் சிலை நிறுவப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பிரதமர், ஆர்.எஸ்.எஸ். தலைவர், உத்தர பிரதேச ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறியுள்ளார்.
பாரம்பரியப்படி நேபாளத்தின் ஜனக்பூர் மற்றும் மிதிலாவில் இருந்து 1,000 கூடைகளில் பரிசுகள் வந்துள்ளதாகவும் சம்பத் ராய் கூறியுள்ளார்.