சபரிமலையில் இன்று மகரஜோதி வடிவில் ஐயப்பனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
இன்று பகல் 12.30 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின், 1 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். பந்தள அரண்மனையிலிருந்து ஐயப்பனுக்கு அணிவிக்க திருவாபரணம் ஊர்வலமாகக் கொண்டுவரப்படும்.
மாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, ஐயப்பசுவாமி திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மகரஜோதியை காண பக்தர்களின் வசதிக்காக 10 இடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.