2024 தேர்தல் தமிழக அரசியலின் இலக்கணத்தை மாற்றியமைக்கும் தேர்தலாக இருக்கும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 54ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய அண்ணாமலை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலின் மொழியையும் இலக்கணத்தையும் மாற்றினால் மட்டுமே மற்ற மாநிலங்களோடு போட்டி போட்டு வளர முடியும் என்று கூறிய அண்ணாமலை, 2024 தேர்தல் அப்படி ஒரு தேர்தலாக இருக்கும் என்றார்.
பொங்கல் தொகுப்பாக DMK Files-ன் 3ஆவது பாகத்தின் முதல் தொகுதியை வெளியிட்டுள்ளதாக அண்ணாமலை கூறினார்.