பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆந்திரா செல்கிறார். சத்ய சாய் மாவட்டத்தில் தேசிய சுங்கத்துறை, நேரடி வரிகள் மற்றும் போதைப் பொருள் தடுப்புக்கான தேசிய பயிற்சி மையத்தைத் திறந்து வைக்கிறார்.
இந்திய வருவாய் சேவை மற்றும் சுங்கத்துறை பயிற்சி முடித்த 74 மற்றும் 75 வது அணிகளை சந்தித்து உரையாட உள்ள பிரதமர், பூட்டானைச் சேர்ந்த சிவில் சர்வீஸ் பயிற்சி முடித்தவர்களையும் சந்தித்து பேசுகிறார். நாளை மறுநாள் கேரளா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, குருவாயூர் கோவிலில் வழிபாடு செய்ய உள்ளார்.
தொடர்ந்து கொச்சியில் துறைமுகம் நீர்வழி படகுப்பயணம், கடல் வர்த்தகம் போன்றவற்றுக்கான நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்க உள்ளார். கொச்சி துறைமுகத்தில் சர்வதேச கப்பல்களின் பழுது நீக்கும் மையத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். கேரளாவில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.