புருனே நாட்டின் இளவரசர் அப்துல் மதீன், மன்னர் வம்சாவளி அல்லாத சாமானிய பெண்ணான தனது காதலி அனிஷா ரோஸ்னாவை திருமணம் செய்துகொண்டார்.
தலைநகர் பந்தர் செரி பெகவானில் உள்ள தங்க மாடம் கொண்ட மசூதியில், மன்னர் சுல்தான் ஹசனல் போல்கியாவின் பத்தாவது மகனும், இளவரசருமான அப்துல் மதீனின் திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது.
கடந்த 7 ஆம் தேதி தொடங்கி, 16 ஆம் தேதி வரை 10 நாட்கள் திருமண நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இளவரசர் அப்துல் மதீன் விமானப்படையில் விமானியாக பணியாற்றி வருகிறார்.
திருமணம் முடிந்து, திறந்த வாகனத்தில் சென்ற புதுமண ஜோடிக்கு பொதுமக்கள் வரவேற்பு கொடுத்தனர்