​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டாரத்தில் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்..

Published : Jan 14, 2024 6:46 PM

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டாரத்தில் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்..

Jan 14, 2024 6:46 PM

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் கனமழை காரணமாக நீரில் மூழ்கிய நிலையில், மோட்டார்கள் வைத்து நீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ,ஓங்கூர், ஆவணிப்பூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட தர்பூசணிகள், தொடர்மழை காரணமாக நிலத்திலேயே அழுகிவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.