​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விமான நிலையம் போல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இ-சைன் போர்டுகள் அமைக்க திட்டம் : தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தகவல்

Published : Jan 13, 2024 4:58 PM

விமான நிலையம் போல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இ-சைன் போர்டுகள் அமைக்க திட்டம் : தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தகவல்

Jan 13, 2024 4:58 PM

யாருடைய உதவியும் இல்லாமல், பயணிகள் தாங்களாகவே பேருந்துகளின் வருகையை அறியும் வகையில் விமான நிலையங்களில் இருப்பதைப் போன்ற எலெக்ட்ரானிக் சைன் போர்டுகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் வைக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா கூறினார்.

அப்பேருந்து முனையத்தில் ஆய்வு செய்த பின் பேட்டியளித்த அவர், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கான தேவை இன்னும் ஓராண்டு காலத்துக்கு இருப்பதாகவும், அதற்குள் அனைத்து பேருந்துகளையும் படிப்படியாக கிளாம்பாகத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.