தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தமிழகத்தின் தூய்மையான நகரமாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில், திருச்சி மேயர் அன்பழகனுக்கும், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதனுக்கும் மத்திய அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், இந்தியா முழுவதும் 446 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், மத்திய பிரதேசத்தின் இந்தோரும், குஜராத்தின் சூரத்தும் இணைந்து முதலிடம் பிடித்துள்ளன.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட தூய்மையான நகரங்களுக்கான பட்டியலில் திருச்சி மாநகரம் 112 வது இடத்தை பிடித்துள்ளது. தூத்துக்குடி 179-வது இடத்தையும், கோயம்புத்தூர் 182-வது இடத்தையும், சென்னை 199-வது இடத்தையும் பிடித்துள்ளன.