மராட்டிய மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள நாட்டிலேயே மிகநீளமான கடல் பாலத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
17 ஆயிரத்து 840 கோடி ரூபாய் மதிப்பில், மும்பை துறைமுகத்தையும், ஜவஹர்லால் நேரு துறைமுகத்தையும் இணைக்கும் விதமாக அடல் சேது கடற்பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்து 78 ஆயிரம் டன் இரும்பையும், 5 லட்சம் டன் சிமெண்டையும் பயன்படுத்தி, கடலில் பதினாறரை கிலோமீட்டர், நிலத்தில் ஐந்தரை கிலோமீட்டர், என மொத்தம் 22 கிலோமீட்டர் தொலைவுக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த 6 வழி பாலம், மும்பையில் இருந்து நவி மும்பைக்கான பயண நேரத்தை 2 மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாக குறைப்பதுடன், போக்குவரத்து நெரிசலையும் கணிசமாக குறைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.