ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள சுகோட்கா தீபகற்பத்துக்கு பயணம் மேற்கொண்ட அதிபர் புதின், அங்கு பசுமை குடில் அமைத்து விவசாயம் செய்யப்படுவதை பார்வையிட்டார்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் அருகேயுள்ள ரஷ்ய பகுதிக்கு முதன் முறையாக சென்ற புதின், நடாலியா மகர்டோவா என்ற பெண்மணி நிர்வகித்து வரும் பண்ணையை பார்வையிட்டார்.
அங்கு வெள்ளரி, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வளர்ப்பு மற்றும் மூலிகை செடிகளின் பலன்கள் குறித்து பெண்மணி விளக்கம் அளித்தார்.