அமெரிக்காவின் லாஸ் வெகாசில் காபி உள்பட பல்வேறு பானங்களை ருசிகரமாக செய்து பரிமாறும் வகையில் அதிநவீன ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்நகரில் நடைபெற்ற மின்னணு பொருட்களின் கண்காட்சியில் ரிச்டெக் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் உருவாக்கிய அந்த ரோபோ காட்சிப்படுத்தப்பட்டது.
ஆடம் என பெயரிடப்பட்டுள்ள ரோபோ டீ, காபி முதல் காக்டெயில் வரை தயாரித்து பரிமாறும் என்றும் செயற்கை நுண்ணறிவு கேமராவின் உதவியுடன் துல்லியமாக செயல்படும் என்றும் ரிச்டெக் டெக்னாலஜிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.