ஒடிசாவின் சிவப்பு எறும்பு சட்னிக்கு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அதிகளவு காணப்படும் சிவப்பு எறும்புகள் மரங்களின் இலைகளில் கூடு கட்டி வாழும் தன்மை கொண்டவை. அப்பகுதியினர் சிவப்பு எறும்புகளை பிடித்து சட்னி செய்து சாப்பிடுவது வழக்கம்.
புவிசார் குறியீடு கிடைத்துள்ளதை அடுத்து, இந்த சட்னியின் தரத்தை உறுதிப்படுத்தி உலகளவில் எடுத்துச் செல்ல முடியும் என அம்மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.