வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தி.மு.கவினருக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பேருந்து இயக்கத்தை பார்வையிடுவதற்காக எம்.எல்.ஏ., அமலு, நகர் மன்றத் தலைவர் உள்ளிட்டோர் சென்றிருந்த போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத்த தொடர்ந்து போலீஸார் சமாதானப்படுத்தினர்.
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பணிமனை முன்பு தங்களது நெற்றியில் பட்டை நாமம் தரித்து கோஷங்கள் எழுப்பினர்.
சிவகங்கை, கும்பகோணம், காஞ்சிபுரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தொழிற்சங்கத்தினர் போக்குவரத்து பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், மக்கள் பாதிக்கப்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.