​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் வளர்ச்சிக்கு கூடுதல் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இலக்கு தேவை: அண்ணாமலை

Published : Jan 09, 2024 4:09 PM

தமிழகத்தின் வளர்ச்சிக்கு கூடுதல் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இலக்கு தேவை: அண்ணாமலை

Jan 09, 2024 4:09 PM

தமிழகத்தில் கூடுதல் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இலக்குகளை இன்னும் பெரிதுபடுத்தி உழைக்க வேண்டும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னையில் பேட்டியளித்த அவர்,  உத்தரப் பிரதேசத்தில் 33.51 லட்சம் கோடி ரூபாயும் கர்நாடகாவில் 9.82 லட்சம் கோடி ரூபாயும் ஈர்க்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார். குஜராத்தில் முதலீட்டாளர் மாநாட்டுக்கு முன்பே பூர்வாங்கமாக கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ. 7 லட்சம் கோடி ஈர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு வந்துள்ள முதலீடு பிரதமர் மற்றும் அவரது திட்டங்களுக்காகவும் வந்திருப்பதாக அவர் கூறினார்.

தமிழ்நாடு 8 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளதாக குறிப்பிட்ட அண்ணாமலை, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரர் மீதும் 3 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளதாக தெரிவித்தார்.

என்னதான் போக்குவரத்து சங்கங்கள் வந்து பேசினாலும், அதனை ஏற்கும் தன்மை அமைச்சர் சிவ சங்கருக்கு இல்லை என்றும், தமிழ்நாட்டின் நிதி சூழல் அவ்வளவு சிக்கலாக உள்ளது என்றும் அண்ணாமலை கூறினார்.