சோனி நிறுவனமும், ஹோண்டா நிறுவனமும் இணைந்து வடிவமைத்துள்ள மின்சார கார்,லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற மின்னணு சாதன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அஃபீலா என பெயரிடப்பட்டுள்ள இந்த மின்சார கார், பிளே ஸ்டேஷன் - ஃபைவ்” கண்ட்ரோலர் மூலம் மேடைக்கு வரவழைக்கப்பட்டது. 5 பேர் பயணிக்க கூடிய மின்சார காரில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 45 கேமராக்களும், சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முன்பதிவு தொடங்கி 2026 ஆம் ஆண்டு முதல் டெலிவரி செய்யப்படும் என சோனி ஹோண்டா மொபிலிடி நிறுவனம் தெரிவித்துள்ளது.