அமெரிக்காவில் ஓரேகான் மாகாணத்தில் செவிலியர் ஒருவர் நோயாளிகளுக்கு வலி நிவாரணி மருந்துக்குப் பதிலாக குழாய்த் தண்ணீரை ஊசி மூலம் செலுத்தியதில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் இருந்து விலை உயர்ந்த மருந்துகள் காணாமல் போவதாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரில் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில் இது தெரியவந்தது.
மருந்துகளைத் திருடி, வெளியில் விற்பனை செய்ததாகவும் அந்த செவிலியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.