​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரபிக் கடலில் சரக்குக் கப்பல்களை பாதுகாக்க 10 போர்க்கப்பல்கள்... சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை முறியடிக்க நடவடிக்கை

Published : Jan 09, 2024 9:04 AM

அரபிக் கடலில் சரக்குக் கப்பல்களை பாதுகாக்க 10 போர்க்கப்பல்கள்... சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை முறியடிக்க நடவடிக்கை

Jan 09, 2024 9:04 AM

சரக்குக் கப்பல்களை கடல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக இந்தியக் கடற்படையின் 10 போர்க்கப்பல்கள் அரபிக் கடலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் அதிரடி நடவடிக்கையால் கொள்ளையர்களிடமிருந்து சரக்குக் கப்பலை இந்தியக் கடற்படையினர் மீட்டனர். அதில் இருந்த 15 இந்தியர்கள் உள்பட 21 பேரும் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் ஏடன் வளைகுடா பகுதியில் இருந்து வரும் எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்கள் மீது டிரோன் தாக்குதல்களைத் தடுக்கவும் கப்பல்களை பாதுகாப்பாக வழிநடத்தி அழைத்துவரவும் சென்னை, கொல்கத்தா, கொச்சி, தல்வார், எனப்பெயரிடப்பட்டுள்ள 10 போர்க்கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் தகவல்களைப் பரிமாறி வருவதாகவும் கடலோர பாதுகாப்பை உறுதி செய்து வருவதாகவும் இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்