பிரதமர் மோடியைப் பற்றி விமர்சித்த 3 அமைச்சர்களை மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பனிப்போர் காரணமாக பெரும் வர்த்தக ரீதியான இழப்பை அந்நாடு சந்தித்து வருகிறது.
மூன்றே நாட்களில் அந்நாடு 800 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நட்சத்திரங்கள், முக்கியப் பிரமுகர்கள் பலரும் மாலத்தீவுகள் செல்ல வேண்டாம் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். சில விமான நிறுவனங்கள் மாலத்தீவு செல்லும் விமானங்களின் முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவுடனான நல்லுறவு தொடர வேண்டும் என்று மாலத்தீவு அரசு விரும்புவதாக தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமது, கோவிட் காலத்தில் இந்தியா அளித்த தடுப்பூசி உள்ளிட்ட உதவிகளை நினைவுகூர்ந்துள்ளார்.
இந்தியாவை வேறு எந்த நாட்டினாலும் ஈடு செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.