இந்தியா உடனான உறவில் விரிசல் நீடித்துவரும் நிலையில், மாலத்தீவின் அதிபர் முகமது முய்சு தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசும் அவர் பல்வேறு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் மாலத்தீவு முழுமையாக இணைவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இது இந்தியாவின் நலனுக்கு எதிரானது என்பதால் மாலத்தீவின் செயல்பாடுகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.