நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றுவரும் உலக முதலீட்டாளர் மாநாட்டில், இந்திய ராணுவம், எல்லை பாதுகாப்புப்படை மற்றும் மாநில காவல்துறையினருக்கு துப்பாக்கிகளை தயாரிக்கும் தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் துப்பாக்கிகள், ரைஃபிள்கள், மெஷின் கன் உள்ளிட்டவை காட்சிபடுத்தப்பட்டன.
திருவள்ளூரில் செயல்படும் கவுன்ட்டர் மெஷர்ஸ் டெக்னாலஜி நிறுவனம் 33 குண்டுகளை கொண்ட பிஸ்டல் முதல் 10 ரவுண்டில் மூவாயிரம் குண்டுகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வகையிலான துப்பாக்கிகள் வரை காட்சிக்கு வைத்திருந்தது.
காட்சிப்படுத்தப்பட்டிருந்த துப்பாக்கிகள் நேட்டோ படையினர் பயன்படுத்தும் துப்பாக்கிகளுக்கு இணையானவை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.