நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர கிராம மற்றும் கடற்கரையோர பகுதிகளில் விரைந்து சென்று நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உத்தரவிட்டுள்ளார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிறப்பு அதிரடிப் படையினருடன் பேசிய அவர், அனைத்து அரசுத் துறையினரும் இணைந்து இந்த மீட்புப் பணியில் ஈடுபடும்படி கேட்டுக்கொண்டார்.
புத்தாண்டு அன்று இஷிகாவா மாகாணத்தில் 7 புள்ளி 6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஏராளமான வீடுகள், சாலைகள் சேதமடைந்துள்ளன.