சிறு தொழில் தொடங்கி பெண்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தால் மட்டுமே சமுதாயத்தில் பெண் அதிகாரம் கிடைக்கும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், தொலைக்காட்சி தொடரை பார்த்து தொலைந்து போகாமல் பெண்கள் தொழில் தொடங்கி தொழில்முனைவோராக மாற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.