சைபர் கிரைம், ஏ 1 போன்ற நவீனத் தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பு சவால்கள் , தீவிரவாதம், கடத்தல் போன்ற குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ரகசிய ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற வருடாந்திர உளவுத்துறை மற்றும் காவல்துறையின் 3 நாள் மாநாட்டின் 2ம் நாளான நேற்று பிரதமர் மோடி பங்கேற்றார்.
சீனா லடாக் எல்லையை மாற்றியமைக்க முயற்சிப்பதால் இந்த மாநாட்டில் எல்லைப் பாதுகாப்பு முக்கியப் பிரச்சினையாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் இருந்து வந்திருந்த டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் என 500 அதிகாரிகளிடம் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைகள் குறித்த விவரம் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.