​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரையில் ரூ.600 கோடி மதிப்பிலான 14.5 ஏக்கர் அரசு நிலம் மதுரா கோர்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து மீட்பு...

Published : Jan 06, 2024 3:12 PM

மதுரையில் ரூ.600 கோடி மதிப்பிலான 14.5 ஏக்கர் அரசு நிலம் மதுரா கோர்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து மீட்பு...

Jan 06, 2024 3:12 PM

மதுரையில் பிளாட் போட்டு விற்க முயன்ற 600 கோடி ரூபாய் மதிப்புள்ள பதினான்கரை ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நூற்பாலை நிறுவனமான மதுரா கோட்ஸ் நிறுவனத்திற்கு 1923 மற்றும் 1925 ஆம் ஆண்டுகளில் மொத்தம் 14 ஏக்கர் 52 சென்ட் நிலம் தரை வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டது.

அந்த நிலத்தை மதுரா கோட்ஸ் நிறுவனம் விதிகளை மீறி விற்பனை செய்ய முயன்றதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, தரை வாடகை ஒப்பந்தத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ரத்து செய்து உத்தரவிட்டதோடு, அந்த இடம் கையகப்படுத்தப்பட்டதாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.