தமிழகத்தில் அரசுக் கட்டடங்கள், திட்டங்களுக்கு ஏற்கெனவே இருந்த தலைவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் வைப்பது கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மறைந்த நடிகர் விஜயகாந்தின் பெயரை வைப்பது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தார்.