விஜயகாந்த் சமாதியில் சூர்யா திடீர் அழுகை .. கலாய்க்கும் நெட்டிசன்கள்..! இறப்புக்கு வராமல் நடிப்பதாக விமர்சனம்..
Published : Jan 05, 2024 7:28 PM
விஜயகாந்த் சமாதியில் சூர்யா திடீர் அழுகை .. கலாய்க்கும் நெட்டிசன்கள்..! இறப்புக்கு வராமல் நடிப்பதாக விமர்சனம்..
Jan 05, 2024 7:28 PM
விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சூர்யா திடீரென்று அமர்ந்து அழுத நிலையில் , சாவுக்கு வராமல் சமாதியில் நடிக்க வேண்டாம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பெரியண்ணா படம் மூலம் தன்னை விஜயகாந்த் வெகுஜன மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததாக தனது நினைவை நடிகர் சூர்யா கண்ணீருடன் பகிர்ந்து கொண்டகாட்சிகள் தான் இவை..!
பெரியண்ணா மட்டும் அல்ல, மாயாவி படத்திலும் சூர்யாவுக்காக சிறப்புத்தோற்றத்தில் நடித்துக் கொடுத்தவர் விஜயகாந்த்..!
விஜய்காந்த் உயிரிழந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்ததால் வர இயலாத நடிகர் சூர்யா, 9 நாட்கள் கழித்து சென்னை திரும்பியதும் விஜயகாந்தின் சமாதிக்கு அஞ்சலிசெலுத்தவந்தார்.
சமாதில் கையெடுத்து கும்பிட்டதும், துக்கம் தாளாமல் உடைந்து அழுதார் , சிறிது நேரம் சமாதியிலும் அமர்ந்தார்
பெரியண்ணா படப்பிடிப்பின் போது 8 வருடமாக அசைவமே சாப்பிடாமல் இருந்த தனக்கு , நடிகன் ஆரோக்கியமாக இருக்கனுமுன்னு சொல்லி , அவரது தட்டில் இருந்து எடுத்து தனக்கு கறி ஊட்டி விட்டதாக கூறிய போதும் நா தழு தழுக்க சூர்யா அழுதார்
சூர்யாவின் இந்த அழுகையை நடிப்பு என விஜயகாந்தின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருபோர் விமர்சிக்கின்றனர் .
இத்தனை நெருக்கமாக இருந்தவரின் இறப்புக்கு வராத சூர்யா இப்போது வந்து அழுவது யாரை ஏமாற்ற ? என்ற கேள்வியும் விவாதமும் சமூக வலைதளங்களில் அனல் பறக்கின்றது.
வெளி நாட்டிற்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்ற அஜீத், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்டோர், தமிழ் திரை உலகின் மூத்த நட்சத்திரமான விஜய்காந்தின் உயிரிழப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் தான் சாவுக்குவரவில்லை என்று ஒரு தரப்பும், சாவுக்கு வராவிட்டாலும் ஒவ்வொருவராக அஞ்சலி செலுத்த வருவது அவர்களின் சூழ் நிலையையும், ஆறுதலாகவும் இருப்பதாக மற்றொரு தரப்பும் கமெண்ட் யுத்தம் நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் ஒருவரின் துக்க நிகழ்வுக்கு வருவதும், வராமல் போவதும் அவரவர் விருப்பம், என்றும் யாரையும் கட்டாயப்படுத்தவோ விமர்சனம் என்ற பெயரில் காயப்படுத்தவோ கூடாது என்றும் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.