​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர தடை இல்லை: உச்சநீதிமன்றம்

Published : Jan 05, 2024 2:50 PM

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர தடை இல்லை: உச்சநீதிமன்றம்

Jan 05, 2024 2:50 PM

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பணமோசடி வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

அப்போது, செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி பிறப்பித்த உத்தரவை, சில மணி நேரங்களில் அவரே நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

தமிழக அரசின் அரசாணை மற்றும் ஆளுநரின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது என்பது அரசியலமைப்பு சாசன நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும், அமைச்சரவையில் அவர் நீடிக்க வேண்டுமா என்பதை தமிழக முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கிய உயர்நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலமைச்சரின் பரிந்துரை இல்லாமல், அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டுள்ளது