வேலூர் அருகே பூட்டை உடைத்து திருடுவதற்காக நுழைந்த நபரை, கதவை வெளிப்பக்கம் தாழிட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், வீட்டுக்குள் மாட்டிக்கொண்டவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
சென்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லட்சுமியம்மாளின் வீட்டிற்குள் கடம்பூரைச் சேர்ந்த பூபதி என்பவர் நுழைந்ததை வெளியிலிருந்து பார்த்த அவரது 15 வயது மகன் கதவை வெளிப்பக்கம் தாழிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.