அமெரிக்காவில், தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதியை குற்றவாளி தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட டியோப்ரா ரெட்டென் என்பவருக்கு எதிராக லாஸ் வேகாஸ் மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
குற்றத்தை ரெட்டென் ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதி மேரி கே ஹோல்தஸ் தீர்ப்பு வாசித்தார்.
தனக்கு பிணை கொடுக்காமல் நீதிபதி தீர்ப்பு வாசிப்பதை கோபத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ரெட்டென், திடீரென்று நீதிபதி முன் இருந்த மேசை மீது தாவிக் குதித்து ஏறிச் சென்று தாக்கியுள்ளார்.
இதையடுத்து, நீதிமன்றக் காவலர்கள் ரெட்டெனை மடக்கிப் பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தாக்குதலில் நீதிபதிக்குக் காயம் ஏதும் இல்லையென்றாலும், காவலர் ஒருவருக்குக் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.