மியான்மர் நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 9 ஆயிரத்து 652 கைதிகளுக்கு அந்நாட்டு ராணுவ ஆட்சித் தலைவர் மின் ஆங் லியாங் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
இவர்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த 114 பேரும் அடங்குவர் என்றும், சிறையில் இருந்த விடுவிக்கப்பட்டதும் அவர்கள் தங்களுடைய சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் இருந்து விடுவிக்கப்படும் கைதிகளைப் பற்றிய தகவல்கள் வெளியாகாத நிலையில், இந்த விடுதலை நடைமுறைகள் முடிய பல நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.