​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நேபாளத்தில் இருந்து பத்தாயிரம் மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம்

Published : Jan 05, 2024 9:47 AM

நேபாளத்தில் இருந்து பத்தாயிரம் மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம்

Jan 05, 2024 9:47 AM

நேபாளத்தில் இருந்து பத்தாயிரம் மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகின.

இரண்டு நாள்  பயணமாக நேபாளம் சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டுப் பிரதமர் புஷ்ப கமல் தஹாலை சந்தித்து, இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்துவது, சாலை மற்றும் ரயில் பாதை இணைப்பு, வர்த்தகம், பாதுகாப்பு, சுற்றுலா, விமானப் போக்குவரத்து, எரிசக்தி உள்ளிட்டவை குறித்து பேச்சு நடத்தினர்.

அதன்பிறகு, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்குவது தொடர்பான நீண்டகால ஒப்பந்தத்தில் ஜெய்சங்கரும், நேபாள வெளியுறவு அமைச்சர் என்.பி. சவுத்தும் கையெழுத்திட்டனர்.