தென் அமெரிக்க நாடான பெருவில் ஆயிரத்து 879 பறவைகள் உள்ளதாகப் பதிவாகியுள்ளது. இதையடுத்து, உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பறவை இனங்கள் கொண்ட நாடாக பெரு முதலிடத்தைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை, ஆயிரத்து 869 பறவைகளுடன் கொலம்பியா முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரு நாட்டின் பறவைகள் ஆவணக் கமிட்டியுடன் தனியார் அமைப்புகள் சமீபத்தில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் ஆயிரத்து 879 பறவை இனங்கள் இருப்பது பதிவு செய்யப்பட்டது.
பெருவில் கண்டறியப்பட்டுள்ள புதிய பறவை இனங்களின் மாதிரிகள் தென் அமெரிக்க பறவைகள் கமிட்டிக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளதாக பெரு நாட்டின் பறவைகள் அமைப்பின் தலைவர் ஃபெர்னாண்டோ ஆங்குலோ தெரிவித்தார்.