​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கையில் இருந்து நாட்டுப் படகில் தமிழகத்துக்குக் கடத்திவரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறை பறிமுதல்

Published : Jan 05, 2024 7:32 AM

இலங்கையில் இருந்து நாட்டுப் படகில் தமிழகத்துக்குக் கடத்திவரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறை பறிமுதல்

Jan 05, 2024 7:32 AM

இலங்கையில் இருந்து நாட்டுப் படகில் தமிழகத்துக்குக் கடத்திவரப்பட்ட நான்கரை கோடி ரூபாய் மதிப்புள்ள 7 கிலோ 700 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு தங்கம் கடத்திவரப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, கடற்பகுதியில் அவர்கள் காத்திருந்தபோது, நாட்டுப் படகில் வந்த ஒருவர், கரையில் இருந்தவரிடம் ஒரு பார்சலைக் கொடுத்துள்ளார்.

பார்சலை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த நபர், சுங்கத் துறை அதிகாரிகள் பின்தொடர்வதை அறிந்து தங்கச்சி மடம் தர்கா நிறுத்தம் அருகே எதிரே வந்த ஆட்டோ மீது மோதிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார்.

அப்போது, பிடிக்க முயன்ற அதிகாரிகளைத் தாக்கிவிட்டு வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த வாகனத்தில் இருந்த தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் தப்பிச் சென்றவர் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஐசக் என்று தெரியவந்த நிலையில், அவரைப் பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.