புத்தாண்டு தினத்தில் மிக மோசமான நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலுக்கு ஆளான ஜப்பானில் மீட்புப் பணிகள், 4வது நாளாக நீடித்து வருகிறது.
நோட்டோ தீபகற்ப பகுதியில் நொறுங்கிப் போன குடியிருப்புகளில் யாராவது உயிருடன் உள்ளனரா என்று மோப்ப நாய் உதவி உடன் மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
தரைமார்க்கமாக செல்ல முடியாத பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய மீட்புக் குழுவினர், இடிந்தபோன வீடுகளுக்கு அருகே நின்று கொண்டு ஒலி பெருக்கி மூலம் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் ராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பல இடங்களில் இடிபாடுகளில் மக்கள் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து கூடுதல் படையினரை அனுப்பி உள்ளதாக ஜப்பான் பிரதமர் கிஷிடா தெரிவித்தார்.