​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமலாக்கத்துறை வழக்கு.. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ஆஜராகாத கவுதம சிகாமணி

Published : Jan 04, 2024 3:49 PM

அமலாக்கத்துறை வழக்கு.. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ஆஜராகாத கவுதம சிகாமணி

Jan 04, 2024 3:49 PM

அமலாக்கத் துறை வழக்கில், குற்றச்சாட்டு பதிவுசெய்ய நேரில் ஆஜராகுமாறு சென்னை கூடுதல் அமர்வு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தி.மு.க எம்.பி கவுதம சிகாமணி இரண்டாவது முறையாக இன்றும் ஆஜராகவில்லை.

விழுப்புரத்தில் 2006-2011 ஆண்டில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகளவு செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதில், அரசுக்கு 28 கோடியே 36 லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்சஒழிப்பு துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை 90 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இவ்வழக்கில், கவுதம சிகாமணி இன்றும் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்கு நீதிபதி மலர் வாலண்டினா தள்ளிவைத்தார்.