திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான வாயில் அலங்காரச் செடிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் 2-வது நாளாக விஷத்தன்மை மிக்க கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் ஒன்றரை லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்ற போது, மலைப்பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் ஆட்சியர் அலுவல வளாகத்திற்குள் தொடர்ந்து சுற்றித் திரிவதாக அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.