அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், பங்குச்சந்தை முறைகேடு பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து 3 மாதங்களுக்குள் முழுமையாக விசாரித்து முடிக்க பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையம் செபியை அறிவுறுத்தியுள்ளது.
22 புகார்களில் 20 புகார்களின் மீதான விசாரணையை செபி முடிந்துள்ள நிலையில், விசாரணையை செபியிடம் இருந்து மாற்ற எந்த அடிப்படையும் இல்லை என நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தை, அந்நிய முதலீடு தொடர்பான செபியின் விதிகளில் தலையிட அவசியமில்லை எனக்கூறியுள்ள நீதிமன்றம், ஹிண்டன்பெர்க் அறிக்கையில் சட்டவிதி மீறல் இருந்தால் அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது