ஜப்பான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ள நிலையில், இடிந்த கட்டடங்களில் சிக்கியவர்களை மீட்பதில் காலத்துடன் போட்டி போட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உயிருடன் தப்பியவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கும் பணியில் ஜப்பான் அரசு அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளது.
சில பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்திருப்பதால் மீட்பு முயற்சிகள் பின்னடைவை சந்தித்தன.
ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்கப்பட்டனர்.