டோக்கியோ விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி தீப்பிடித்த கோர விபத்து குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் விமானத்தின் தார்ச்சாலையால் ஆன ஓடுதளம் சேதம் அடைந்து தரையிற்ககும்போது விபத்து ஏற்பட்டதா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜப்பானின் நிலநடுக்கத்தையடுத்து நிவாரணப் பொருட்களுடன் கடலோர காவல்படை விமானம் தரையிறங்கியபோது, அங்கு நின்றிருந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் மீது மோதியதில் இரண்டு விமானங்களும் தீப்பிடித்து எரிந்தன.
கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 6 பேரில் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
பயணிகள் விமானத்தில் இருந்த 379 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் உயிர்தப்பினர்.70க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.