இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 33 பேரை துருக்கி போலீசார் கைது செய்தனர்.
வெளிநாடுகளில் தங்கியுள்ள ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாட் தீர்த்துக்கட்ட நினைத்தால் கடும் எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என துருக்கி அரசு எச்சரித்திருந்தது.
இந்நிலையில், துருக்கியின் 8 மாகாணங்களில் 57 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்திய அந்நாட்டு போலீசார் 33 பேரை கைது செய்தனர்.
கைதான 33 பேரும் துருக்கியில் தங்கியுள்ள இஸ்ரேல் எதிர்ப்பு கருத்து கொண்டவர்களை தேடி கண்டுபிடித்து, தக்க சமயம் பார்த்து தாக்குதல் நடத்தி கடத்தும் நோக்கத்துடன் செயல்பட்டதாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி எர்லிக்காயா தெரிவித்தார்.