சாலை விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் லாரி, டிரக் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எந்த ஓட்டுநரும் திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்துவது இல்லை என்றும் 3 ஆண்டுகள் இருந்த தண்டனை காலத்தை 10 ஆண்டுகளாக உயர்த்துவது தேவையற்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தால் வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி நிலையில், தமிழ்நாட்டுக்கு சென்னையில் இருந்தே பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுவதால் தட்டுப்பாடு வராது என பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.