வியாசார்பாடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள குறைகள் அனைத்தும் வரும் பொங்கல் பண்டிக்கைக்கு பின்னர் சரி செய்யப்படும் என்றார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 2 மாதங்களில், 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 200 மீட்டர் தொலைவுக்கு மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 20 கோடி ரூபாய் செலவில் இரயில் நிலையம் அமைக்கப்படுவதுடன், 120 கோடி ரூபாயில் ஆகாய நடைபாதையும் உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.