இந்தியாவில் கடந்தாண்டு கார் விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
கொரோனா காலத்தில் கார் விற்பனை சற்று சரிந்திருந்த நிலையில், கடந்தாண்டு நாடு முழுவதும் 41 லட்சம் கார்கள் விற்பனை ஆகி உள்ளன. அதிகபட்சமாக மாருதி நிறுவனம் 20 லட்சம் கார்களையும், அதற்கு அடுத்ததாக ஹுண்டாய் நிறுவனம் 6 லட்சம் கார்களையும் விற்பனை செய்ததாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
2022 ஆம் ஆண்டில் விற்பனை ஆன கார்களின் சராசரி விலை 10 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில் கடந்தாண்டு அது பதினொன்றரை லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது