தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே விவசாய நிலத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட நிலத்தின் உரிமையாளர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காரிமங்கலம் - மொரப்பூர் சாலையில் இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில், இங்கு மது வாங்கும் ஆசாமிகள், சாலையோரமும் அருகிலுள்ள விவசாய நிலங்களிலும் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்தவகையில் அங்குள்ள சரவணன் என்பவரது விவசாய நிலத்தில் அமர்ந்து மது அருந்திய கும்பல் போதையில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர்.
அவர்களை சரவணன் தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்து அவரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளனர்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே சரவணன் உயிரிழந்த நிலையில், கொலை தொடர்பாக இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.