மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் தௌபல் மாவட்டத்தில் சீருடை அணிந்த சிலர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இரண்டு இனக்குழுவினரிடையே மீண்டும் வன்முறை வெடிக்கலாம் என போலீசார் சந்தேகிக்கும் நிலையில், தௌபல், இம்பால், பிஷ்னபூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வன்முறை பரவுவதைத் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வீடியோ பதிவு மூலமாக வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் பிரேன்சிங், மக்களிடம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். வன்முறையாளர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.