மக்களவைத் தேர்தலில் 375 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதர 25 அரசியல் கட்சிகளுக்கு 170 தொகுதிகளை மட்டும் விட்டுக் கொடுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆந்திரா கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களில் இண்டியா கூட்டணி கட்சிகளை கைவிட்டு விட்டு காங்கிரஸ் தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரசுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே உட்பூசல் வலுத்திருப்பதாக பாஜக விமர்சனம் செய்து வருகிறது.
இதனால் மாநில அளவில் பலம் பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்குள் கடுமையான அதிருப்தி நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.