​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இன்று காலை 10 மணியளவில் திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ.19,850 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்..!!

Published : Jan 02, 2024 6:27 AM

இன்று காலை 10 மணியளவில் திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ.19,850 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்..!!

Jan 02, 2024 6:27 AM

இன்று காலை 10 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகிறார். அவரை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக மாத்தூர் அருகே உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்கிறார்.

நண்பகல் 12 மணியளவில், ஏர்போர்ட் பகுதியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

சுமார் 19 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை ரயில் உயர்கல்வி எரிவாயு தொடர்பான நலத்திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது பல ரயில்வே திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தை தரம் உயர்த்தி புதிய விமான நிலைய 2வது புதிய முனையம் இந்திய விமான நிலைய ஆணையத்தால் 1100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இன்று பிரதமர் மோடி, புதிய முனையத்தை திறந்து வைக்கிறார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். .

திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 500 படுக்கைகள் கொண்ட மாணவர் விடுதியையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

மாலை 3.15 மணியளவில் பிரதமர் லட்சத்தீவுக்கு செல்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி திருச்சியைச் சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.