டெபிட் கார்டு அல்லது ஏ.டி.எம். அட்டை இல்லாமல் செல்ஃபோனில் கியூ.ஆர்.கோடை ஸ்கேனிங் செய்து வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கக் கூடிய ஏ.டி.எம். எந்திரங்களை ஜப்பானின் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
தேசிய பேமெண்ட் கார்பரேஷனுக்கு உட்பட்ட யூ.பி.ஐ. செயலிகளில் புத்தாண்டு தினம் முதல் ஒரு சில மாற்றங்களை கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதன்படி, கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் போன்ற செயலிகளில் ஓராண்டுக்கு மேல் செயல்படாத ஐ.டி.கள் மற்றும் எண்களை முடக்குமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
யூ.பி.ஐ. செயலிகளை பயன்படுத்தி பணம் செலுத்தும் போது பணம் பெறுபவரின் வங்கி கணக்கில் உள்ள உண்மையான பெயரை திரையில் காட்டும் வசதியும் அறிமுகமாகியுள்ளது.